சீனாவின் வடகிழக்கு நகரமான சாங்சுனில் உணவகம் ஒன்றில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
சமையல் எரிவாயு வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சீனாவில் கட்டடங்களின் மோசமான வடிவமைப்பு, போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாதது போன்ற காரணங்களால் அடிக்கடி தீ விபத்து மரணங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அந்த நாட்டின் சாங்ஷா நகரில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் 53 போ் பலியானது குறிப்பிடத்தக்கது.